Most trusted astrology platform worldwide

பிறந்த தேதி மற்றும் நேரத்தின் படி அதிர்ஷ்டமான குழந்தை பெயர்கள் - எண் கணித முறை

ஒரு குழந்தை பிறந்த தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையிலான ஜாதகக் குறிப்புகள் வைத்து கணக்கிடப்படும் நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர்களின் பண்டைய மரபு.
இந்த பழக்கத்தை இந்த தொழில்நுட்பம் கலந்த வளர்ந்த நூற்றாண்டிலும், தொழில்நுட்பத்தோடு நாங்கள் துல்லியமாக கணித்து சேவை வழங்குகிறோம் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் உதவியுடன்.

life prediction free

Enter your personal details

Provide accurate details for the most precise report.

    * Your baby name will be generated in Tamil & English

    tamil-baby-names-list

    What Users Say

    4.0
    ★★★★
    Based on 3 Reviews
    RPK+0

    Takes less than 1 minute

    Ramesh
    Madurai
    ★★★☆☆

    'Nice tool and numerology details are accurate. It would be great if there were a few more modern name options.'

    Priya
    Coimbatore
    ★★★★

    'Good collection of lucky Tamil baby names. Helped us find a nice name for our daughter based on her star.'

    Karthikeyan
    Chennai
    ★★★★★

    'Romba useful and detailed baby name suggestions based on birth time. Excellent accuracy and very traditional names!'

    tamil-naming-ceremony

    தமிழ் பண்பாட்டில் பெயரின் முக்கியத்துவம்

    குழந்தையின் பிறப்பு என்பது ஒரு தம்பதியின் உண்மையான தருணமாகும். அந்த குழந்தையின் அடையாளத்தை அவன் அல்லது அவள் சுமக்கும் பெயரில்தான் உள்ளது.

    தமிழ் மரபின்படி நாம் குழந்தைக்கு சூட்டும் பெயர் அந்த குழந்தையை அழைப்பதற்காக மட்டுமின்றி, குழந்தையின் எதிர்காலத்தையும், வெற்றியையும் தீர்மானிக்கும் சக்தியாக நம்பப்படுகிறது.

    இந்த காரணத்தினால்தான் பெற்றோர்கள் பிறந்த தேதிப்படி குழந்தை பெயர்களை (baby name by date of birth) தேர்ந்தெடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஜாதகம் மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் சூட்டுதல் (naming by jathagam)

    ஜோதிட சாஸ்திரத்தின் படி சந்திரன் ஒரு குழந்தை பிறக்கும் போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் நிற்கின்றாரோ அதுவே குழந்தையின் "ஜென்ம நட்சத்திரம்" ஆகும்.

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 பாதங்கள் உள்ளன, ஒவ்வொரு பாதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஒலியெழுத்து (Syllable) குறிக்கப்பட்டுள்ளது.

    உதாரணமாக, அஸ்வினி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்த குழந்தைக்கு "சூ" என்ற எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்பது திருக்கணித பஞ்சாங்கக் குறிப்பு.

    உங்கள் குழந்தையின் ஜாதகப்படி பெயர்களை சரியான பெயர்களைத் தேர்ந்தெடுக்க, துல்லியமான பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் மிக முக்கியமானதாகும்.

    jathagam-based-naming
    birth-time-astrology-chart

    பிறந்த நேரத்தின் முக்கியத்துவம் (Importance of birth time)

    ஏன் பிறந்த நேரம் மிக முக்கியம்? ஒரு நட்சத்திரத்தின் பாதம் என்பது தோராயமாக 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே இருக்கும்.

    குழந்தை பிறந்த நேரத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் நட்சத்திர பாதம் மாறிவிடும் எனவே மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட துல்லியமான நேரத்தைக் கொண்டு ஜாதகம் கணிப்பது மிக மிக அவசியம்.

    எண் கணிதம் (Numerology)

    எண் கணிதம் ( Numerology ) இது ஒரு மேற்கத்திய ஜோதிட (western astrology) முறையாகும். நம் குழந்தையின் பெயரின் முதல் எழுத்து நட்சத்திரம் தீர்மானித்தாலும், அந்த பெயரின் முழுமையான அதிர்ஷ்டத்தை எண் கணிதம் தீர்மானிக்கிறது.

    எண் கணித மதிப்பு: பெயரில் உள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்திற்கும் ஒரு மதிப்பு உண்டு (A=1, B=2,…) பெயரின் மொத்த கூட்டுத்தொகை குழந்தையின் பிறந்த தேதிக்கும் (psychic number) மற்றும் விதிஎண்ணிற்கும் ( destiny number ) இணக்கமாக இருக்க வேண்டும்.

    பிறந்த தேதி (psychic number): பிறந்த குழந்தையின் பிறந்த தேதியில் உள்ள பிறந்த நாள் ஆகும்.

    விதி எண் (destiny number): பிறந்த தேதியின் மொத்த கூட்டு எண், உதாரணத்திற்கு 22/05/2026 குழந்தை பிறந்தது என்றால் 2+2+0+5+2+0+2+6 = 19, 1+9 = 10, 1+0 = 1 விதிஎண் 1 என்பது.

    விதிஎண் மற்றும் பிறந்த தேதி இரண்டும் சேர்ந்து கிடைப்பது தான் அதிர்ஷ்ட எண் ஆகும்.

    numerology-number-calculation
    lucky-baby-names-tips

    அதிர்ஷ்டமான பெயர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் (Tips for parents)

    பொருள் பொதிந்த பெயர்கள்: வெறும் அதிர்ஷ்டமான பெயர்கள் மட்டும் போதாது, பெயரின் பொருள் (Meaning) நேர்மறையானதாக இருக்க வேண்டும்.

    உச்சரிப்பு: பெயர் உச்சரிக்க எளிமையாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும்.

    நவீனமும் பாரம்பரியமும்: நவீன காலத்திற்கு ஏற்ப ஸ்டைலான (style) பெயராகவும், அதே சமயம் நமது கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும்.

    எங்களின் ஆன்லைன் பெயர் கருவியின் சிறப்புகள் (Why use our tool?)

    நாங்கள் வழங்கும் 300 + குழந்தை பெயர்கள் பட்டியல் (baby name list) வெறும் பெயர்கள் மட்டுமின்றி; அவை ஒவ்வொன்றும் நட்சத்திர எண் கணித முறைப்படியும் சரிபார்க்கப்பட்டது.

    • 300-க்கும் மேற்பட்ட பெயர்கள்
    • தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பெயர்கள் பட்டியல்
    • உடனடியாக PDF Download
    • ஈ-மெயில் மூலம் PDF அறிக்கை
    • உங்கள் சந்தேகம் தீர்க்க customer support
    • ஜோதிடரின் தொலைப்பேசி ஆலோசனை

    Frequently Asked Questions

    • குழந்தையின் பெயருக்குப் பிறந்த நேரம் அவசியமா?

      ஆம், 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை நட்சத்திர பாதம் மாறும். எனவே, சரியான முதல் எழுத்தைக் கண்டறிய துல்லியமான பிறந்த நேரம் அவசியம்.

    • ஜாதகம் மற்றும் எண் கணித பெயர்களுக்கு என்ன வித்தியாசம்?

      ஜாதகம் பெயரின் முதல் எழுத்தைத் தீர்மானிக்கிறது. எண் கணிதம் அந்தப் பெயரின் முழுமையான கூட்டுத்தொகை அதிர்ஷ்டமானதாக இருப்பதை உறுதி செய்கிறது.

    • இரட்டை குழந்தைகளுக்கு ஒரே எழுத்தில் பெயர் வைக்கலாமா?

      இரட்டைக் குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறப்பதால் நட்சத்திர பாதம் ஒன்றாகவே இருக்கும். எங்களின் 300+ பெயர்கள் பட்டியலில் இருந்து நீங்கள் வெவ்வேறு பெயர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

    • பழைய பெயருக்கு எண் கணித பலன் பார்க்க முடியுமா?

      நிச்சயமாக. உங்கள் குழந்தையின் விவரங்களை உள்ளீடு செய்து, தற்போதைய பெயர் அதிர்ஷ்டமானதாக இருக்கிறதா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.