Most trusted astrology platform worldwide

onepage-mobile-menu

Explore Our Astrology Insights

Unlock the mysteries of the stars and embrace the cosmic guidance

நட்சத்திர அடிப்படையில் பொருத்தமான தொழில்

nakshatra-profession

ஜோதிட சாஸ்திரப்படி 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் உள்ளன. 27 நட்சத்திரங்களும் சந்திரனை அடிப்படையாக வைத்து தான் செயல்படுகின்றன. பிறக்கும் மனிதர்கள் இதில் எதாவது நட்சத்திரத்தில் தான் பிறக்கிறார்கள். ராசிகளின் அடிப்படையில் பொதுவான பலன்களே ஜோதிடத்தில் கணிக்கப்படுகின்றன.

நட்சத்திரங்கள்

நட்சத்திர அடிப்படையில் எந்த தொழில் உங்களுக்கு பொருத்தமாகும்?

நட்சத்திரங்களின் அடிப்படையிலே ஒருவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கணிக்க முடிகிறது. இந்த நட்சத்திரங்களின் அடிப்படையில் 27 நட்சத்திரக்காரர்களில் எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன வேலை அல்லது தொழில் செய்தால் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும், வாழ்வில் வெற்றி தரும் என்பதை அறியமுடிகிறது.

உங்கள் நட்சத்திரம் அறிய கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்:

Enter your jathagam details

Provide accurate details for the most precise horoscope report.

    date of birth
    birth time
    Father's Name
    Mother's Name

    அஸ்வினி நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காவல்துறை, பாதுகாப்புப் படைகள், குதிரை ஏற்றம், குதிரைப் பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், பிசியோதெரபிஸ்ட், வேதியியலாளர்கள், ஆலோசகர்கள், மருந்து நிபுணர்கள், விளையாட்டு துறையை சார்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள், போக்குவரத்து துறையில் பணிபுரிபவர்கள், அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ், மோட்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டண்ட் மென், எக்ஸ்ப்ளோரர்கள்.

    ரேசிசங் தொழிலில் ஈடுபடுபவர்கள், ஆராய்ச்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கட்டிடத் தொழில், கான்கிரீட் போடுபவர்கள், வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளி, ஆர் டி ஓ அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலை, கெமிக்கல் இன்ஜினியரிங், இயந்திர மேலாளர்கள், பொறியியல் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிய வாய்ப்புகள் ஏற்படும்.

    பரணி நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் அலுவலக மேலாளர்கள், குழந்தை பராமரிப்பாளர்கள், நர்சரி பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்பவர் அல்லது விற்பவர், கேளிக்கை, தீம் பூங்காக்கள், மகப்பேறு மருத்துவர்கள், மகளிர் மருத்துவரகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, அலுவலகத்தில் முக்கிய பணியில் இருப்பவர்கள், கால்நடை மருத்துவர்கள்.

    திரைத்துறை, இசைதுறையில் சந்திப்பவர்கள், பொழுதுபோக்கு சாதனங்கள் உற்பத்தி அல்லது விற்பனை செய்தல், உரம் மற்றும் விதை விற்பன்ன செய்தல், டீ கடை ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், தேயிலை தொழில், உணவு விநியோகம், உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல், இறைச்சி கூடங்களுடன் தொடர்புடைய தொழில்கள், புவி இயற்பியலாளர்கள், நடன கலைஞ்ர்கள்.

    கிருத்திகை நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் பைனான்ஸ், வங்கிப் பணிகள், ராணுவ ஜெனரல், மேலாளர்கள், விமர்சகர்கள், அதிகார பதவிகளில் இருப்பவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பல்கலைக்கழகம் தொடர்பான வல்லுநர்கள், நகை வியாபாரிகள், கண்ணாடி தயாரிப்பாளர்கள், வாள்வீரர்கள், வேலிகள், வாள்கள், கத்திகள் மற்றும் பிற கூர்மையான கருவிகளை உருவாகும் நபர்கள், கொல்லர்கள், வழிபாடுகளை ஊக்குவிக்கும் ஆன்மிக ஆசிரியர்கள், பாதுகாவலர்கள், உணவு சமைப்பவர்கள், பாத்திரங்கள் உற்பத்தி அல்லது பாத்திர வியாபாரம், சிகையலங்கார நிபுணர், அழகு கலை நிபுணர், வீடு கட்ட தேவையான கட்டுமான பொருட்கள் விற்பனை செய்பவர், தீயணைப்புத் துறை, தையல், எம்பிராய்டரி போன்ற கூர்மையான ஊசிகள் முலம் செய்யும் தொழில், மேலும் நெருப்பை பயன்படுத்தி செய்யக்கூடிய அனைத்து தொழில்கள்.

    ரோகிணி நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் விவசாயம், அனைத்து வகையான விவசாய தொழில் செய்பவர்கள், தாவரவியலாளர்கள், மூலிகையாளர்கள், உணவு பதப்படுத்தும் துறை, பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட பணிகள், அறிவியல் ஆசிரியர், வணிகம், டிரேடிங், கனிம வர்த்தகம், பைலட், கப்பல் போக்குவரத்தில் உள்ள பணிகள், ஜவுளிக்கடை, அழகு நிலையம், பூக்கடை, பாஷின் டிசைனிங், பாடலாசிரியர், கவிஞர், பாட்டு பாடுதல், பேக்கேஜிங் மற்றும் விநியோகம் நடனம் மற்றும் இசைத்துறை, ஓவியர்கள், மீன் விற்பனை, கடல் வாழ் பொருட்கள் சம்பந்தப்பட்ட அனைத்தும், நகை மற்றும் இரத்தின வியாபாரிகள், உள்துறை அலங்கரிப்பாளர்கள், வங்கியாளர்கள், நிதியாளர்கள், போக்குவரத்து வணிகம், சுற்றுலாத் தொழில், உணவகம், ஹோட்டல் வணிகக் கலைகள், ஒப்பனை கலைஞர்கள், பேச்சாளர்கள், நிதி ஆலோசகர்கள்.

    மிருகசீரிஷம் நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் மென்பொருள் பொறியாளர், அனைத்து வகையான இசை கலைஞர்கள், பாடகர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சித்தனையாளர்கள், காதல் நாவலாசிரியர்கள், கதை ஆசிரியர்கள், மொழி ஆராய்ச்சி செய்யபவர்கள், பூமி தொடர்பான தயாரிப்புகளின் டீலர்கள், டெக்ஸ்டைல் மற்றும் கார்மெண்ட்ஸ் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், பேஷன் டிசைனர்கள், கால்நடை மருத்துவர்கள், செல்லப்பிராணி விற்பனையாளர்கள், ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், அலுவுலக உதவியாளர்கள், சுற்றுலா அழைத்து செல்லும் தொழில், பத்திர பதிவுத்துறை, சிவில் நீதிபதிகள், மனோதத்துவ நிபுணர்கள், விளம்பர முகவர்கள், விவசாயிகள் மற்றும் தோட்டக்காரர்கள், வனத்துறை அதிகாரிகள், வரைபட தயாரிப்பாளர்கள், உளவியல் மற்றும் ஜோதிடர்கள், வர்ணனையாளர்கள், வன பாதுகாவலர்கள்.

    திருவாதிரை நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் மின் பொறியாளர்கள், எலெக்ட்ரீசியன், மின்னணு மற்றும் கணினி தொழில், ஒலி பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், திரைப்படத்துறையில் ஸ்பெஷல் எபக்ட்ஸ் செய்யபவர்கள், கணினி விளையாட்டு வடிவமைப்பாளர்கள், கணிதவியாளர்கள், ஆராச்சியாளர்கள், அணுமின் நிலையங்களில் பணிபுரிபவர்கள், எக்ஸ்ரே நிபுணர்கள், ரேடார் பணியாளர்கள், பயோடெக்னாலஜிஸ்டுகள், போட்டோகிராபர், போட்டோ ஸ்டுடியோ, பிளக்ஸ் டிசைனிங், பர்னிச்சர் விற்பனை, ஜெராக்ஸ் கடை, கைபேசி, கணினி விற்பனை, ஆயுத தொழிற்சாலைகளில் வேலை, வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள்,காவல்துறை, நகைச்சுவை நடிகர்கள், ஜோதிடர்கள், உயிரியல் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள்.

    புனர்பூசம் நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் கணித ஆசிரியர், வங்கி மேலாளர், ஆடம்பர பொருட்களை விற்பனை செய்பவர், ஹோமியோபதி மருத்துவர், ஆசிரியர்கள், ஹோட்டல் மற்றும் உணவக தொழில், சிவில் இன்ஜினியரிங், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில், ஆன்மிக ஆசிரியர்கள், கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர், விமானிகள் மற்றும் விண்வெளி வீரர்கள், போக்குவரத்து தொழில்துறை பணியாளர்கள், உளவியலாளர்கள், தத்துவவாதிகள்,நடிப்பு மற்றும்.பொழுதுபோக்கு வேலை, சுற்றுலாத்துறை வல்லுநர்கள், மறுசுழற்சி நிபுணர்கள், அஞ்சல் சேவை நிறுவனங்கள், விண்வெளி செயற்கைக்கோள் வல்லுநர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வில்வித்தையாளர்கள், வீட்டு பராமரிப்பு சேவை வாழுங்பவர்கள்.

    பூச நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் பால் பண்ணை, டீ கடை, பால்கோவா உற்பத்தி, பால் சார்ந்த பலகாரங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை, பால் சார்ந்த தொழில்கள் அனைத்தும், அரிசி கோதுமை வியாபாரம், மளிகை பொருட்கள் விற்பனை அங்காடி, எண்ணெய் வியாபாரம், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள், அல்லது பழைய இரும்பு கடைகள், பழைய வாகனங்கள், விற்பனை, அரசியலில் ஈடுபடுவார்கள், ஆசிரியர்கள், ஆன்மிக குருமார்கள், உளவியலாளர்கள், ரியல் எஸ்டேட் முகவர்கள், தொண்டு நிறுவனங்கள் நடத்துபவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், கைவினை கலைஞர்கள், பாரம்பரிய உணவு விற்பனையாளர்கள், அல்லது, பாரம்பரிய மருந்து விற்பனையாளர்கள், ஆலோசகர்கள், நதி மற்றும் ஏரி தொடர்பான தொழில்கள், கல்வி வல்லுநர்கள், தொகுப்பாளர்கள்.

    ஆயில்யம் நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் வணிகம், மருந்து பொருட்கள் விற்பனை, மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை சார்ந்த வேலை, இரசாயன பொறியாளர்கள், பெட்ரோலிய தொழில்துறை தொழிலாளர்கள், அரசியல்வாதிகள்,கலைஞர்கள், அலோபதி மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களுக்கான புத்தகம் விற்பனை செய்பவர், யோகா ஆசிரியர்கள், செல்லப்பிராணி விற்பனையாளர்கள், மனநல மருத்துவர்கள், ரகசிய சேவை முகவர்கள், உளவாளிகள்,இ சேவை மையம் நடத்துபவர், அடகு கடை வைத்திருப்பவர், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாளர்கள், கப்பல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள், விண்வெளி மற்றும் கடல் ஆராச்சியாளர்கள், மீனவர்கள்

    மகம் நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் நிர்வாகிகள், மேலாளர்கள், அரசு அதிகாரிகள், வணிகம் செய்பவர்கள், அந்தந்த துறையில் உள்ள உயர்மட்ட தொழில் வல்லுநர்கள், அதிகார பதவியில் உள்ள உயர் அதிகாரிகள், நடுவர்கள், நீதிபதிகள், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், சிறந்த ஜோதிடர்கள், ராணுவத்தில் பணிபுரிபவர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், பரம்பரை பாரம்பரியமாக செய்யும் தொழில்கள், ஆன்மிக நூல்கள் மொழி பெயர்ப்பாளர்கள், நூல் பதிப்பகம், மரபணு பொறியியல் வல்லுநர்கள், அருங்காட்சியகங்களுடன் தொடர்பு உள்ளவர்கள், அமானுஷ்யவாதிகள், கறுப்பு மந்திரவாதிகள்.

    பூரம் நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் சினிமா பொழுதுபோக்கு கலைஞர்கள், அழகு கலைஞர்கள், ஒப்பனை கலைஞர்கள், மாடல்கள், புகைப்படக்கலைஞர்கள், கலைக்கூட நிர்வாகிகள், படைப்பாற்றல் கலைஞர்கள், சினிமா பாடகர்கள், இசையமைப்பாளர்கள், சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட பணியில் இருபவர்கள், ஜவுளி விற்பனையாளர்கள், திருமண தொடர்பான தொழில்கள்(திருமண மண்டபம், கேட்டரிங், ரேடியோசெட், மேடை அலங்காரம்) பூக்கள் விற்பனையாளர்கள், பருத்தி மற்றும் பட்டு உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள், கம்பளி விற்பனையாளர்கள், நறுமண பொருட்கள் விற்பனையாளர்கள், ஊடக பிரபலங்கள் ஊடகங்களில் கமெண்ட்ரி மற்றும் விவாதம் செய்பவர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நகை செய்பவர்கள் மற்றும் நகை வியாபாரிகள்.

    உத்திரம் நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் இந்திய ஆட்சி பணியில் உள்ளவர்கள், மேலாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குதுறையில் பணிபுரிபவர்கள், கிரியேடிவ் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், சினிமாத்துறை பிரபலங்கள், தலைவர்கள், கோவில் தலைமை அர்ச்சகர்கள், ச்ர்ச் பாதிரியார், மசூதி மௌலானாக்கல், மற்றும் இதர மதங்களில் உள்ள தலைமை பூசாரி அல்லது போதகர்கள்,ஆசிரியர்கள், அனைத்து துறைகளிலும் தொழில் முறை ஆலோசகர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள்,கவுன்சிலர்கள்,இதய மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், சமையல்காரர்கள், விமான பணிப்பெண்கள், தானிய வியாபாரிகள், வனத்துறை சம்பந்தப்பட்ட பணியாளர்கள், (வனவிலங்கு காப்பகம், பறவைகள் சரணாலயம் போன்றவற்றில் பணிபுரிபவர்கள்) கால்நடை மருத்துவர்கள், திருமண ஆலோசகர்கள், ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய வல்லுநர்கள்,சர்வதேச ராஜதந்திரிகள்.

    ஹஸ்தம் நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் ஆடிட்டர், டீலர், பில்டர், கமிஷன் ஏஜென்ட்கள், நோட்புக் விற்பனை கடை உரிமையாளர்கள், காகிதத் தொழிற்சாலை, பதிப்பகம் மற்றும் அச்சிடுதல் சம்மந்தப்பட்ட துறை, பேக்கேஜிங் தொழில், பொம்மை தயாரிப்பாளர்கள், தச்சர்கள், ஜோதிடர்கள், கைரேகை நிபுணர்கள், நகைச்சுவை நடிகர்கள், வர்ணணையாளர்கள், மந்திரவாதிகள், கைவினைக் கலைஞர்கள், கணக்காளர்கள், வங்கியாளர்கள், பூங்கா பராமரிப்பாளர்கள், தட்டச்சு செய்பவர்கள், உடலுழைப்புத் தொழிலாளர்கள்,நகை தயாரிப்பாளர்கள், ஜிம்னாஸ்ட்கள், சர்க்கஸ் கலைஞர்கள், விசித்திர கதை எழுதுபவர்கள், தினசரி பயன்பாட்டு பொருட்கள் விற்பனையாளர்கள், பல்வேறு துறையில் வணிக வல்லுநர்கள், எழுத்தர்கள், துப்புரவு பணியாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், கை மருத்துவர்கள், வேதியியல் நிபுணர்கள், ஜவுளி தொழில் பணியாளர்கள், சிற்பிகள்,வானொலி மற்றும் தொலைக்காட்சி வர்ணணையாளர்கள்

    சித்திரை நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள், ஜவுளிக்கடை உரிமையாளர்கள், விவசாயம் செய்பவர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், இயந்திர பாகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள், சிறை அதிகாரி, வழக்கறிஞர்கள், பாடகர், இசையமைப்பாளர், ஓவியர்கள், புகைப்பட கலைஞர்கள், ஒளிபரப்பாளர்கள், சிறப்பு திறன்களை கொண்ட தொழில் வல்லுநர்கள், கலை இயக்குனர்கள்,நாவலாசிரியர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள், விளம்பர தொழில் மற்றும் கலைஞர்கள், மார்க்கெட்டிங் வேலைகள், கிராபிக்ஸ் கலைஞர்கள், வாஸ்து நிபுணர்கள், சொற்பொழிவாளர்கள், பொது மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், நகைக்கடை தொழில் மற்றும் அங்கு வேலை செய்வோர்.

    ஸ்வாதி நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் வாகன விற்பனையாளர்கள், பங்கு சந்தை வர்த்தகம், இசை கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விமானிகள், விமானத்துறையுடன் தொடர்புடைய தொழிலாளர்கள், மல்யுத்த வீரர்கள், பலூன்கள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள், பல்புகள் மற்றும் வண்ண விளக்குகள் விற்பனையாளர்கள், ஒப்பந்ததாரர், குத்துவிளக்கு விற்பனையாளர்கள், கோவில்களில் விளக்கு விருபவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், வர்த்தகத் தலைவர்கள், வீட்டு பணியாளர்கள், திருமண தகவல் மையம் நடத்துபவர், பேச்சை பயன்படுத்தி செய்யக் கூடிய தொழிலில் ஈடுபடுபவர்கள், விளையாட்டு வல்லுநர்கள், ஆராச்சியாளர்கள், சுதந்திரமான தொழில் முனைவோர், போக்குவரத்துத் தொழில்கள், கணினி மற்றும் மென்பொருள் தொழில்கள், சாகச விளையாட்டு வீரர்கள், வணிகர்கள்.

    விசாகம் நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் குற்றவியல் வழக்கறிஞர்கள், நடன கலைஞர்கள், இசை கலைஞர்கள், நடிகர்கள், ஜவுளி உற்பத்தி தொழில், நீதிபதி, வெளிநாட்டு வர்த்தகம், வங்கி பணி, மதுக்கடைகள் மற்றும் மதுபான தொழிற்சாலைகள், விளையாட்டு வீர்ரகள், விமர்சகர்கள், மத அடிப்படைவாதிகள், காவல்துறை, வருமான வரித்துறை, வரி வசூலிப்பவர்கள், அரசியலில் ஈடுபடுபவர்கள், பாலின மருத்துவர், காப்பீடு வசூலிப்பவர்கள், லோன் வசூலிப்பவர்கள், வணிக சங்க தலைவர்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பணிபுரிபவர்கள், உளுந்து மற்றும் எண்ணெய் பொருட்கள் விற்பனையாளர்கள்.

    அனுஷம் நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் காவல்துறை, இராணுவம், தீ அணைப்பு துறை, உளவுத்துறை, மருத்துவம், வங்கி சம்மந்தப்பட்ட பணிகள், சுரங்க தொழில், வழக்கறிஞர், போட்டோக்ராபர், ஜோதிடர்கள், வெளிநாடுகளுக்கு சென்று செய்யும் வேலை, வெளிநாடுகளுடன் கையாளும் தொழில்கள், நிறுவன தலைவர்கள், இரவு பணி சம்மந்தப்பட்ட தொழில்கள்,இசைக்கலைஞர்கள், மேலாளர்கள், தொழிலதிபர்கள், ஆலோசகர்கள், ஊக்குவிப்பாளர்கள், கணிதவியலாளர்கள், எண் கணித வல்லுநர்கள், கண் கட்டு வித்தை செய்பவர்கள், விஞ்ஞானிகள், குற்றவியல் வழக்கறிஞர்கள், மக்களுக்கு உபயோகப்பட கூடிய போக்குவரத்தை கையாளுபவர்கள் (பயணத்திற்கு பயன்படக்கூடிய கார், ஆட்டோ) உளவியலாளர்கள்.

    கேட்டை நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் காவல் துறை, இராணுவம், அரசு அதிகாரிகள், நிர்வாக பதவிகள், குடும்ப வணிகம், இசை வல்லுநர்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், நடிகர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், பத்திரிக்கை நிருபர்கள், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், குற்றவியல் வழக்கறிஞர்கள், ஹெல்ப் லைனில் பணிபுரிபவர்கள்(உதாரணமாக 108,100 வாடிக்கையாளர்கள் சேவை மையம்) கடற்படை சார்ந்த பணியில் இருபவர்கள், மனநல மருத்துவர், பல் மருத்துவர், துப்பறிவாளர்கள், முதியோர்களை பராமரித்தல், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், அமானுஷ்யம் செய்பவர்கள், மோசடி நிபுணர்கள், படைவீரர்கள்.

    மூலம் நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் விவசாயம், பழ வியாபரம், மருந்து விற்பனை (மெடிக்கல்) மருத்துவர், ஆயுர்வேத மருத்துவம், பல் மருத்துவர், அமைச்சர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், ஆன்மிக ஆசிரியர், காய்கறி வியாபாரம், மூலிகை வியாபாரம், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், மத குருக்கள், சட்ட ஆலோசகர், ஜோதிடர்கள், கணித ஆசிரியர், இயற்பியலாளர்,மருந்து பொருட்களை கையாளும் துறை, காவல்துறை அதிகாரிகள், துப்பறிவாளர்கள், புலனாய்வாளர்கள், நீதிபதிகள், நுண்ணுயிரியல் மற்றும் மரபியல் ஆராச்சியாளர்கள், பாதுகாவலர்கள், அணு இயற்பியலாளர்கள்,குதிரை பயிற்சியாளர்கள், உளவியல் நிபுணர்கள், தத்துவவாதிகள்.

    பூராடம் நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் விமானப் போக்குவரத்து, விமானிகள், கடற்படை பணியாளர்கள், கடல் வாழ் நிபுணர்கள், கப்பல் தொழில், மீன்பிடித் தொழில்கள், மாலுமிகள், விளையாட்டு ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆயுத தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள், நீர் பயன்படுத்தி செய்யக்கூடிய தொழில், பொழுதுபோக்கு இடங்களில் வேலை செய்வோர்கள், ஆசிரியர்கள், உயரமான இடங்களில் பணிபுரிபவர்கள், மலை சார்ந்த இடங்களில் பணிபுரிபவர்கள், ஆன்மிக பொருட்கள் விற்பனை, ஆடை வடிவமைப்பாளர்கள், பேஷன் நிபுணர்கள், வெளிநாட்டு வர்த்தகம், பயணம் சம்பந்தப்பட்ட தொழில்கள்.மேலாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள்.

    உத்திராடம் நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் பிறருக்கு ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்குதல் , வழிகாட்டுதல், வழிநடத்துதல், போன்ற பல்வேறு வகையான வேலைகளால் ஈர்கப்படுவார்கள், ஆன்மிக ஆலோசகர்கள், மத குருக்கள், அதிகார பதவியில் இருப்பவர்கள், ஆசிரியர்கள், இயற்க்கை மற்றும் வனவிலங்குகள் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள், பொருளாதார நிபுணர்கள், வனத்துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், நூலகர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், உடற்பயிற்சி நிறுவனம் நடத்துபவர், நீதிபதி, இராணுவம், கல்வித்துறை, திரைத்துறை, கட்டுமான தொழில், அரசு ஒப்பந்த தொழில், அனைத்து நிர்வாகம் சார்ந்த தொழில்கள், சட்டமன்ற உறுப்பினர், மருத்துவர்

    திருவோணம் நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள்,பேராசிரியர், மொழி பெயர்ப்பாளர்கள், மொழி ஆராச்சியாளர்கள், கதை எழுதுபவர்கள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், இசை, ஓவியம், நாட்டியம் போன்ற காலை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்கள், அது சார்ந்த துறையில் பணிபுரிபவர்கள், ஆலோசகர்கள், பதவித்துறையில் பணியாற்றுபவர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தகவல் தொடர்பு துறையில் பணிபுரிபவர்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள், வாகன ஓட்டுனர்கள், கப்பல் சம்மந்தப்பட்ட வேலையில் இருப்பவர்கள், ஹோட்டல் சார்ந்த துறையில் பணிபுரிபவர்கள், மீன் வளர்ப்பு, மீன் வியாபாரம், மீனவர்கள், பால் வியாபாரிகள்

    அவிட்டம் நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் இசை கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், இராணுவம், இரும்பு வியாபாரம், இரத்தின கற்கள் வியாபாரம், விளையாட்டு வீரர்கள், ரியல் எஸ்டேட் தொழில், யோகா ஆசிரியர்கள், மருத்துவர்கள், சமையல்காரர்கள், வாகன ஓட்டுனர்கள், காவல்துறையினர், கறிக்கடை வைத்திருப்போர், கோழி கால்நடை வளர்ப்பாளர்கள், மருந்தகங்கள், ஆபரணங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், அறிவியல் ஆராச்சியாளர்கள்

    சதயம் நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் எலக்ட்ரீசியன், மிண்னணு பொருட்கள் விற்பனையாளர்கள், மின்சார துறை சம்பந்தப்பட்ட வேலையாட்கள்,ரேடார் மற்றும் எக்ஸ்ரே நிபுணர்கள், கணினி இ சேவை மையம், செல்போன் விற்பனை, விமானிகள், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிவோர், தொலைக்காட்சி விற்பனையாளர்கள், சினிமா துறையில் தொடர்புள்ளவர்கள், தற்காப்பு கலை பயிற்சியாளர்கள், ஜிம் ட்ரெய்னர்கள், புகைப்பட கலைஞர்கள், ஆட்டோமொபைல், வெளிநாடு சென்று வேலை பார்த்தல், வர்த்தகம், பெட்ரோல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், வானியலாளர்கள், ஜோதிடர்கள்.

    பூரட்டாதி நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் வங்கி பணி, ஆடிட்டர், நகை கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், அரசு கருவூலத்தில் வேலை, ஆசிரியர்கள், மருத்துவ பயற்சியாளர்கள், பத்திரிக்கை துறை, காவல்துறை, அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட வேலை, கோவில்களில் பூஜை பொருட்கள் விற்பனையாளர்கள் (பூ, விளக்கு), கோவில் அருகே உணவு விடுதி நடத்துபவர்கள், துணை இராணுவ பணி, வாகன தொழில், வீடு வாடகை, நிலம் வாங்கி விற்பது, நகைக்கடை மற்றும் வங்கியில் பணிபுரியும் காவலர்கள், அதிக வெப்பத்தை பயன்படுத்தி செய்யக் கூடிய தொழில்கள், மருந்து உற்பத்தி துறை தொழில்.

    உத்திரட்டாதி நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் வரலாற்று ஆசிரியர்கள், காய்கறி விற்பனை, வெளிநாட்டு வேலை, வழக்கறிஞர், நீதித்துறை, மருத்துவர்கள், காலணி விற்பனை, திரைத்துறை, பலசரக்கு கடை, பால் வியாபாரம், மாடு வளர்ப்பு, அரசு ஒப்பந்ததாரர்கள், துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்கள், மீன் வளர்ப்பு தொழில், கரும்பு வியாபாரம், நகை அடகு கடை நடத்துபவர், விதை விற்பனையாளர்கள், எண்ணெய் விற்பனையாளர்கள், ஆன்மிகவாதிகள், தியானம் மற்றும் யோகா நிபுணர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை தொடர்பான பணிகள் செய்வோர்கள், ஆராய்ச்சியாளர்கள், தத்துவவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள்.

    ரேவதி நட்சத்திரம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தொழில்கள் ஆலோசகர்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், நடிகர்கள், நகைச்சுவை கலைஞர்கள், ஜோதிடர்கள், வெளிநாட்டு வேலையில் இருப்பவர்கள், காலெண்டர் தயாரிப்பு, கடிகார விற்பனையாளர்கள், வணிகம் செய்பவர்கள், உணவு பொருட்கள் விற்பனையாளர்கள், ஓட்டுனர்கள், போக்குவரத்து சார்ந்த பணியில் இருப்பவர்கள், மார்க்கெட்டிங் வேலைகள் செய்பவர்கள், ஆடிட்டர், ரயில்வே துறையில் பணிபுரிபவர்கள், கணினி சம்பந்தப்பட்ட துறை, வேளாண் பொருட்கள் விற்பனையாளர்கள், உளவியலாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், ஹிப்னாடிஸ்டுகள், கப்பல் மற்றும் கடல் சம்மந்தப்பட்ட வேலை செய்பவர்கள்.

    Blog HeaderRelated BlogBlog Header

    No related blogs found.

    No related blogs found.

    Recent Post






















    Categories