Most trusted astrology platform worldwide

onepage-mobile-menu

காதல் கைகூடுமா ?உங்கள் ஜாதகம் என்ன சொல்கிறது

love astrology

உங்கள் காதல் திருமணம் நடக்குமா?

ஜாதகத்தின் அடிப்படையில் துல்லியமான Love Horoscope பெறுங்கள்

Enter your birth details

Provide accurate details for the most precise report.

    * Your Love horoscope report will be generated in selected Language.

    💖 காதல் – கவிஞர்களுக்கு இது ஒரு கவிதை.

    🧬 அறிவியலுக்கு – ஒரு ஹார்மோன் மாற்றம்.

    🔮 ஆனால், ஜோதிடத்தைப் பொறுத்தவரை காதல் என்பது"பூர்வ புண்ணியம்".

    "நாங்கள் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறோம், ஆனால் எங்கள் திருமணம் நடக்குமா? வீட்டில் சம்மதிப்பார்களா?
    ஜாதகத்தில் காதல் யோகம் இருக்கிறதா?"

    இந்தக் கேள்விகள் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    காதல் வருவது இயற்கை. ஆனால் அந்த காதல் திருமணத்தில் முடியுமா அல்லது பாதியிலேயே பிரிந்துவிடுமா என்பதை தீர்மானிப்பது கிரகங்களே.

    இந்தக் கட்டுரையில், love astrology அடிப்படையில் காதல் திருமணத்திற்கான கிரக அமைப்புகள், தடங்கல்கள், மற்றும் அதற்கானத் தீர்வுகளை காண்போம்.

    💘 காதலுக்கு (love astrology) காரணமான கிரகங்கள்

    ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் காதலை உண்டாக்குவதில்லை. குறிப்பிட்ட சில கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்போதுதான் ஒருவருக்கு காதல் மலர்கிறது என்பதை love astrology தெளிவாகச் சொல்கிறது.

    💖 அ. சுக்கிரன்

    ஜோதிடத்தில் காதலுக்கு முதல் மந்திரி சுக்கிரன் தான். ஒரு ஆணின் ஜாதகத்தில் மனைவி அல்லது காதலியைக் குறிப்பவர் இவரே.

    love astrology -யில் சுக்கிரன் பலமாக இருந்தால், அந்த நபர் இயல்பாகவே கவர்ச்சியாக இருப்பார்.

    சுக்கிரன் பலமாக இருந்தால், அந்த நபர் இயல்பாகவே கவர்ச்சியாக இருப்பார். இவர்களைப் பார்த்தவுடனே எதிர்பாலினத்தவருக்கு ஈர்ப்பு ஏற்படும்.

    கலை, ரசனை, மற்றும் ரொமான்ஸ் ஆகியவற்றின் காரகன் இவர்.

    காதல் விதி: ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் அல்லது நட்பு வீட்டில் இருந்தால், அந்த நபருக்குத் திருமண வாழ்க்கை அல்லது காதல் வாழ்க்கை இனிமையாக அமையும்.

    🔥 ஆ. செவ்வாய்

    சுக்கிரன் அழகு என்றால், செவ்வாய் வேகம் மற்றும் துணிச்சல்.

    ஒருவருக்கு தைரியமாகத் தன் காதலைச் சொல்லும் ஆற்றலைக் கொடுப்பது செவ்வாய்.

    செவ்வாய் பலமாக உள்ளவர்கள் காதலுக்காக எதையும் எதிர்த்து நிற்பார்கள்.

    ஆனால், செவ்வாய் அளவுக்கதிகமாக பலம் பெற்றால், அது முரட்டுத்தனமான அதிகார குணமாக மாறிவிடும்.

    🌙 இ. சந்திரன் – மனதின் காரகன்

    மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. காதல் என்பது முதலில் மனதில் தான் தோன்றுகிறது. அந்த மனதை ஆள்பவர் சந்திரன்.

    சந்திரன் சுக்கிரனுடனோ அல்லது புதனுடனோ சேர்ந்தால், அந்த நபர் மிகவும் மென்மையான காதலராக இருப்பார்.

    சந்திரன் கெட்டுப்போனால், மனக்குழப்பம் ஏற்பட்டு, இவரைத் திருமணம் செய்யலாமா வேண்டாமா? என்ற சந்தேகம் கடைசி வரை இருக்கும்.

    💍 ஜாதகத்தில் காதல் திருமண யோகம் உள்ளதா?

    உங்கள் ஜாதகத்தில் காதல் திருமணம் நடக்குமா என்பதை அறிய, சில முக்கிய இடங்களை love astrology தெளிவாகக் காட்டுகிறது.

    ⭐ முக்கியமான இடங்கள்:

    • ❤️ 5-ம் இடம் :இதுதான் காதலின் ஆணிவேர். பூர்வ புண்ணியம், காதல், மற்றும் ஈடுபாடு ஆகியவற்றைக் குறிக்கும் இடம்.
    • 💑 7-ம் இடம் :இது வாழ்க்கைத் துணை (கணவன்/மனைவி) மற்றும் திருமணத்தைக் குறிக்கும் இடம்.
    • 🌈 9-ம் இடம் :இது பாக்கியம் மற்றும் சம்பிரதாயத்தைக் குறிக்கும் இடம்.
    • ✨ 11-ம் இடம் :ஆசைகள் நிறைவேறுமா என்பதைக் காட்டும் இடம்.

    🔮 காதல் (love astrology) திருமணத்திற்கான சூத்திரங்கள்:

    விதி 1 : 5-ம் அதிபதியும் (காதல்), 7-ம் அதிபதியும் (திருமணம்) ஒருவருக்கொருவர் சேர்ந்திருந்தாலோ, பார்த்துக் கொண்டாலோ அல்லது பரிவர்த்தனை பெற்றாலோ காதல் திருமணம் நிச்சயம். இதுதான் மிகச் சிறந்த காதல் யோகம்.
    விதி 2 : லக்னத்திலோ அல்லது 7-ம் இடத்திலோ ராகு அல்லது கேது இருந்தால், அவர்கள் கலப்புத் திருமணம் (Inter-caste Marriage) அல்லது மரபு மீறிய திருமணம் செய்ய அதிக வாய்ப்புள்ளது.
    விதி 3 : சுக்கிரனும் செவ்வாயும் ஒரே வீட்டில் சேர்ந்திருந்தால், அந்த நபருக்கு காதல் வேட்கை அதிகமாக இருக்கும். இவர்கள் பெரும்பாலும் காதல் திருமணம் செய்வார்கள்.
    விதி 4 : 5-ம் அதிபதி 9-ம் இடத்தோடு தொடர்பு கொண்டால், அது பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் ஆகும்.

    ⚠️ காதல் (love astrology) தோல்வி ஏன்?

    💔 3. காதல் (love astrology) தோல்வி ஏன் ஏற்படுகிறது?

    எல்லாக் காதலும் ஜெயிப்பதில்லை. சில love astrology அமைப்புகள் காதலை பாதியிலேயே முறித்துவிடுகின்றன.

    ⚠️

    6-ம் இடத் தொடர்பு: 5-ம் அதிபதி (காதல்) 6-ம் இடத்திற்கு (வம்பு, வழக்கு) சென்றால், காதல் விவகாரம் சண்டையில் முடியும்.

    🔒

    8-ம் இடத் மறைவு: 5-ம் அதிபதி 8-ல் மறைந்தால், காதல் அவமானத்தையோ அல்லது ஏமாற்றத்தையோ தரும்.

    🪐

    சனி - சுக்கிரன் சேர்க்கை: இது ஒரு கர்ம வினை சேர்க்கை. காதலில் அதிக தடைகள், தாமதங்கள் ஏற்படும்."நம்ம ஆளு நம்மள புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாங்க" என்று புலம்ப வைப்பது இந்த அமைப்புதான்.

    ⬇️

    நீச்ச கிரகங்கள்: 7-ம் அதிபதி நீச்சம் (பலம் இழப்பது) பெற்றால், காதலித்தவரையே திருமணம் செய்வதில் சிக்கல் உண்டாகும்.

    🙏 4. பெற்றோரின் சம்மதம் கிடைக்குமா?

    காதலிக்கும் பலருக்கும் இருக்கும் பெரிய பயம் –"வீட்டில் சம்மதிப்பார்களா?". இதற்கும் ஜாதகத்தில் தெளிவான விடை உண்டு.

    ☀️🌙

    சூரியன் (தந்தை) & சந்திரன் (தாய்):ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் பலமாக இருந்து, 5-ம் இடத்தோடு நல்ல தொடர்பில் இருந்தால், பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொள்வார்கள்.

    🔥🪐

    சூரியன் - சனி பகை:சூரியனும் சனியும் ஒரே வீட்டில் இருந்தாலோ அல்லது பார்த்துக்கொண்டாலோ, தந்தைக்கும் மகன் / மகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். காதலுக்குத் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்.

    🕉️✨

    குருவின் பார்வை:எப்பேர்ப்பட்ட தோஷம் இருந்தாலும், லக்னத்தையோ அல்லது 7-ம் இடத்தையோ குரு பார்த்தால், இறுதியில் பெரியவர்கள் மனது மாறி திருமணத்தை நடத்தி வைப்பார்கள்.இதுதான்"குரு பார்க்க கோடி நன்மை".

    💞 5. நட்சத்திரப் பொருத்தம் vs மனப் பொருத்தம்

    பொதுவாகத் திருமணத்திற்கு 10 பொருத்தம் பார்ப்பார்கள். ஆனால், காதல் திருமணத்திற்கு அவை அனைத்தும் அவசியமா?

    💡

    பதில்: தேவையில்லை. ஆனால் சில முக்கிய பொருத்தங்கள் இருந்தால் போதும்.

    ❤️

    காதல் திருமணத்தில் தினப் பொருத்தம் (உடல் & மன ஆரோக்கியம்) மற்றும் யோனிப் பொருத்தம் (தாம்பத்திய ஒற்றுமை) மிக முக்கியம்.

    🌙

    நட்சத்திரங்கள் பொருந்தவில்லை என்றாலும், லக்னப் பொருத்தம் (Lagna Compatibility) மற்றும் ராசி அதிபதி பொருத்தம்இருந்தால் தாராளமாகத் திருமணம் செய்யலாம்.

    💞

    வசியம் (Vasiyam):காதல் திருமணத்திற்கு மிக முக்கியமான பொருத்தம். இருவருக்கும் இடையே ஈர்ப்பு குறையாமல் இருக்க இது அவசியம்.

    🔮

    காதலை வெல்வது எப்படி?
    "பொருத்தம் இல்லை" என்று சொன்னால் உடனே சோர்ந்து போகாதீர்கள். நட்சத்திரப் பொருத்தம் ஒன்று. ஜாதக ரீதியான மனப் பொருத்தம் இன்னொன்று.

    🌟

    நட்சத்திரப் பொருத்தம் என்பது வேறு.

    ❤️

    ஜாதக ரீதியான மனப் பொருத்தம் என்பது வேறு. உங்கள் இருவரின் ஜாதகத்திலும்"காதல் யோகம்" உள்ளதா என்பதை துல்லியமாகக் கணித்து, அதற்கேற்ப முடிவெடுங்கள்.

    🌸

    காதல் என்பது தெய்வீகமானது . அதை அடைவதற்குச் சரியான நேரமும், சரியான முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்!

    🌸

    ஜாதகம் மூலம் உங்கள் காதல் திருமணப் பொருத்தத்தைத் துல்லியமாக பார்க்க OnePageHoroscope.com தளத்தைப் பார்வையிடவும்.

    Frequently Asked Questions

    ✨ காதல் • திருமணம் • ஜாதக ரகசியங்கள் ✨

    தாராளமாகச் செய்யலாம். நட்சத்திரப் பொருத்தம் என்பது Arranged Marriage-க்குத் தான் மிக முக்கியம். காதல் திருமணத்திற்கு "லக்னப் பொருத்தம்" மற்றும் "திசா புத்தி" பொருத்தம் இருந்தால் போதும்.

    பொதுவாக செவ்வாய் தோஷம் உள்ளவர், தோஷம் உள்ளவரைத் தான் மணக்க வேண்டும் என்பது விதி. ஆனால், விதிவிலக்குகள் உண்டு. 27 வயதுக்கு மேல் திருமணம் நடந்தாலோ, அல்லது குருவின் பார்வை இருந்தாலோ இந்த தோஷம் அடிபட்டுப் போகும். தனிப்பட்ட ஜாதகத்தை ஆராய்ந்தே முடிவு செய்ய வேண்டும்.

    ரிஷபம், துலாம் (சுக்கிரனின் வீடுகள்), மற்றும் கடகம் (சந்திரனின் வீடு) ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே காதல் உணர்வு அதிகம். மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாகத் தங்கள் காதலைத் தக்கவைத்துக் கொள்வார்கள்.

    ஜாதகத்தில் 9-ம் அதிபதி (தந்தை) மற்றும் 4-ம் அதிபதி (தாய்) வலுவாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தடைகள் இருந்தால், குலதெய்வ வழிபாடு செய்வது பெற்றோரின் மனதை மாற்ற உதவும்.

    எங்கள் OnePageHoroscope.com தளத்தில் உங்கள் இருவரின் பிறந்த தேதியைக் கொடுத்தால், 10 பொருத்தம் மட்டுமின்றி, காதல் திருமணத்திற்கான சாத்தியக்கூறுகளையும் தெரிந்துகொள்ளலாம்.

    Blog HeaderRelated BlogBlog Header

    No related blogs found.

    No related blogs found.

    Recent Post


    Categories


    Premium

    📅 2026 புத்தாண்டு பலன்கள்

    52 வார முழு கணிப்பு - ஒவ்வொரு வாரமும் உங்கள் ராசி பலன்!

    📊
    வாராந்திர கணிப்பு
    🔮
    பரிகாரங்கள்
    அதிர்ஷ்ட குறிப்புகள்
    📲PDF உடனடி WhatsApp டெலிவரி