Explore Our Astrology Insights
Unlock the mysteries of the stars and embrace the cosmic guidance
Unlock the mysteries of the stars and embrace the cosmic guidance
பூப்பெய்தல் ஜாதகம் online பொதுவாக ஒரு குழந்தை பிறந்தவுடன், பிறந்த நேரத்தை சரியாக குறித்து வைத்து அந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதுவது என்பது தமிழர்களின் மரபு அதனை ஜனன ஜாதகம் என்று பெயர் உண்டு. அனால் பெண்குழந்தைக்கு மட்டும் ஒரு விதி விளக்கு இருக்கிறது, ஒரு பெண் தனது உடல்ரீதியாகவும் அறிவியல் பார்வையிலும் பருவம்மடையும் நேரத்தை சரியாக குறித்து கொண்டு எழுதப்பட்டு ஜாதகமானது ருது ஜாதகம் என்றும் பூப்பெய்தல் ஜாதகம் என்றும் கூறப்படுகிறது.
இந்த ருது ஜாதகம் அல்லது பூப்பெய்தல் ஜாதகத்தில் சில ரகசியங்களும், இந்த ஜாதகத்தை எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் எங்களது ஜோதிடர் குழு இங்கு விவரித்துள்ளது.
ருதுஜாதகம் கணிக்க நமக்கு தேவைப்பாடு முக்கியமான விவரங்கள் ருதுவான நேரம், ருதுவான இடம், ருதுவான தேதி. இந்த மூன்றும் மிக முக்கியமான விவரங்களாகும், இந்த விவரம் இல்லது நம்மால் ருது ஜாதகம் கணிக்க முடியாது.
ஜனன ஜாதகம் போல் ருது ஜாதகத்திற்கும் லக்கினம் உண்டு, அந்த லக்கினத்தை முதலில் கணிக்கவென்று. பின்பு ருதுவான ராசி மற்றும் நட்சத்திரம் கணிக்கவேண்டும். நமது பாரம்பரியமான பஞ்சாங்கத்தை கொண்டு இதனை கணிக்கலாம்.
நமது முன்னோர்கள் இதனை ஒரு பழக்கமாவாகும், வீட்டில் பஞ்சாங்கத்தை ஒரு முக்கிய பொருளாகவும் வருடம் முழுவது கடை பிடித்து வந்தார்கள். இப்பொழுது நம் அந்த குறிப்புகளை கணினியின் வாயிலாக பெற்றுக்கொள்கிறோம்.
பொதுவாக வீட்டில் பெண் பூப்பெய்தல் அந்த வீட்டில் நல்ல வளர்ச்சி இருக்கும், வீட்டின் இருள் நீங்கி வீட்டின் பிரகாசம் கூடும் என்பது ஒரு ஐதீகம்.
இத ஜடஹ்கத்தை கொண்டு ஒரு பெண்ணின் திருமண வாழ்கை பற்றியும், அவளது வருங்கால கணவரைபற்றியும், கணவனோடு அவள் சேர்ந்து வாழக்கூடிய பாக்கியத்தையும், புத்திர பாக்கியத்தையும் பற்றி கூறலாம்.
இந்த ருது ஜாதகம் திருமணத்திற்காகவும், குடும்ப வாழ்க்கையின் பாக்கியத்தையும் கருதி கொள்வது ஒரு முக்கியமான பங்காற்றுகிறது.
ஜனன ஜாதகம் என்பது ஒருவரின் இந்த பிறப்பின் கர்மாவையும் நோக்கத்தையும் பல பலன் பார்க்க உதவப்படும். அதேபோல் ருது ஜாதகம் பார்க்கப்படுவது ஜோதிடத்தில் பயனுள்ளது தான்.