Explore Our Astrology Insights
Unlock the mysteries of the stars and embrace the cosmic guidance
Unlock the mysteries of the stars and embrace the cosmic guidance
உங்கள் ஜாதகம் விம்ஷோத்தரி தசா என்பது வேத ஜோதிடத்தில் ஒரு முன்கணிப்பு அமைப்பாகும். ஒரு மனிதரின் வாழ்கையில் நடக்கும் அடுத்தடுத்த நிகழ்வுகள் எவ்வாறான தாகத்தை வெளிப்படுத்தும் எந்தெந்த காலகட்டத்தில் வெளிப்படுத்தும் என்பதை கணிக்க பல தசா முறைகள் பயன்படுத்தப்படுகிறது.பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரத்தில் பராசர முனிவரால் 42 வகையான தசா அமைப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன . இவற்றில் இந்த கலியுகத்தில் விம்ஷோத்திரி தசா முறை மக்களுக்கு மிகவும் பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த கணிப்பு துல்லியமான மற்றும் நம்பகமான முடிவுகளை தருவதாக கருதப்படுகிறது.
சமஸ்கிருதத்தில் விம்ஷோத்தரி என்றால் 120 என்று பொருள், தசா என்றால் காலம் என்று பொருளாகும். கலியுகத்தில் மனிதனின் முழுமையான ஆயுட்காலமும் 120 ஆண்டுகளாக கருதப்படுகிறது. எனவே விம்ஷோத்தரி தசா, கலியுகத்தில் மனிதனின் வாழ்கை முறையுடன் ஒத்துப்போவதாக நம்பப்படுகிறது. விம்ஷோத்தரி தசா ஆண்டுகள் 120 ஆகும். இந்த 120 ஆண்டுகளையும் நவகிரங்கள் தங்களுக்கான ஒதுக்கப்பட்ட காலங்களில் தனிமனிதனின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.அந்த காலகட்டத்தில் ஜாதகருக்கு சுபபலன்கள் நடப்பதும் அசுபபலன்கள் நடப்பதும் அவர் பிறந்த கால ஜென்ம ஜாதகத்தில் (தமிழ் ஜாதகம்) கிரங்களின் பெற்ற வழு மற்றும் நிலை மற்றும் பாவத்தின் அடிப்படையிலும் நடக்கும்.
வேத ஜோதிட முரைப்படி தனிநபரின் விமஷோத்தரி தசா காலத்தை புரிந்துகொள்ள ஜென்ம ஜாதகத்தில் ஜாதகர் பிறந்த நேரத்தில் சந்திரனின் நிலை பயன்படுத்தப்படுகிறது. ஜாதகர் பிறந்த நேரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திர அதிபதியின் தசா காலம் முதலில் தொடங்கும். பின் அதை தொடர்ந்து கால சக்கரத்தில் நட்சத்திரங்களுக்கு என்ன கிரகம் அதிபதியாக அமைந்துள்ளதோ அந்த வரிசைபடி தசா ஒவ்வொன்றாகக் குறிப்பிட வருட கால இடைவெளியில் ஜாதகருக்கு நடக்கும். இந்த காலகட்டத்தில் தசா நடத்தும் கிரங்கள் ஜென்ம ஜாதகத்தில் சுபா வலுவுடன் இருக்கும் பட்ச்சத்தில், இருக்கும் பாவத்தின் அடிப்படையிலும் ஜாதகருக்கு சாதகமான சுபபலன்களை கொடுக்கும். அதுவே பலம் இழந்தோ, (பகை, நிச்சம், கிரஹணம், அஸ்தமனம்) பாவத்துவமாக வலு பெற்றிருந்தாலோ (6,8,12 ஆம் பாவத்தில் பலம் பெற்றால்) அசுப பலன்களை கொடுத்து ஜாதகரை துன்பத்தில் ஆழ்த்தும். ஒவ்வொரு கிரங்களின் தசா காலங்களில் ஒன்பது கிரங்களின் புத்தியும், அந்தரமும் வரிசைப்படி தொடங்கி நடந்தேறும்.
ஜெனன ஜாதகத்தில் சூர்யன் கேந்திரம், திரிகோணம் அல்லது உபஜெய ஸ்தானத்தில் சாதகமான நிலையில் இருந்தால் அந்த காலகட்டத்தில் ஜாதகருக்கு பெரும், புகழும் வந்து சேரும். தலைமைத்துவ திறன்கள், தொழில் விஷயங்களில் வெற்றியை ஏற்படுத்தும். அரசுத்துறையில் பணி, பதவி உயர்வு, பொருளாதார முன்னேற்றத்தை உண்டாகும்.
ஜெனன ஜாதகத்தில் சந்திரன் கேந்திரம், திரிகோணம் அல்லது உபஜெய ஸ்தானத்தில் சாதகமான நிலையில் இருந்தால் அந்த காலகட்டத்தில் ஜாதகருக்கு நல்ல செல்வத்தையும், திடமான மனஉறுதியையும் கொடுக்கும். ஜாதகருக்கு நல்ல கற்பனை ஆற்றலை ஏற்படுத்தும்.
ஜெனன ஜாதகத்தில் செவ்வாய் லக்கண சுபராகி கேந்திரம், திரிகோணம் அல்லது உபஜெய ஸ்தானத்தில் சாதகமான நிலையில் இருந்தால் அந்த காலகட்டத்தில் ஜாதகருக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி வாய்ப்புகளை உண்டாகும். பூமியினால் ஆதாயம் உண்டாகும்.அதிகாரம் செலுத்தக்கூடிய பதவியில் அமரும் யோகம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
ஜெனன ஜாதகத்தில் புதன் லக்கண சுபராகி கேந்திரம், திரிகோணம் அல்லது உபஜெய ஸ்தானத்தில் சாதகமான நிலையில் இருந்தால் அந்த காலகட்டத்தில் ஜாதகருக்கு நல்ல.கல்வி அறிவு, கல்வியால் வாழ்வில் முன்னேற்றம் அடையும் யோகம் உண்டாகும். ஜாதகருக்கு வணிகம் சார்ந்த அறிவாற்றல் அதீதமாக காணப்படும். பேச்சாற்றல் வாய்ந்தவராக ஜாதகர் காணப்படுவர்.
ஜெனன ஜாதகத்தில் குரு லக்கண சுபராகி கேந்திரம், திரிகோணம் அல்லது உபஜெய ஸ்தானத்தில் சாதகமான நிலையில் இருந்தால் அந்த காலகட்டத்தில் ஜாதகர் நல்ஒழுக்கம் கொண்டவராகவும் சமுதாயத்தில் உயர்ந்த மனிதர் எனும் அந்தஸ்தையும் பெறுவார். தெய்வ பக்தி கொண்டவராக இருப்பார். பிறருக்கு.அறிவுரை .போதிக்கும் பணிப்பாளராக இருப்பார். வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
ஜெனன ஜாதகத்தில் சுக்ரன் லக்கண சுபராகி கேந்திரம், திரிகோணம் அல்லது உபஜெய ஸ்தானத்தில் சாதகமான நிலையில் இருந்தால் அந்த காலகட்டத்தில் ஜாதகருக்கு சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும். சுயஅலங்காரத்தை விரும்புவாராக ஜாதகர் இருப்பார். கலை, இயல், இசை போன்றவற்றில் ஜாதகருக்கு ஆர்வத்தை உண்டாக்கும்.வாழ்வில் மகிழ்ச்சியை மட்டும் விரும்பக்கூடியவராக ஜாதகர் இருப்பார்.
ஜெனன ஜாதகத்தில் சனி லக்கண சுபராகி கேந்திரம், திரிகோணம் அல்லது உபஜெய ஸ்தானத்தில் சாதகமான நிலையில் இருந்தால் அந்த காலகட்டத்தில் ஜாதகருக்கு உழைப்பால் முன்னேற்றத்தை உண்டாக்கும். வேலை ஆட்களால் லாபத்தை ஏற்படுத்தும். நிதானமான வளர்ச்சியை உழைப்பால் உண்டாக்கும்.
ஜெனன ஜாதகத்தில் ராகு உபஜெய ஸ்தானத்தில் சாதகமான நிலையில் இருந்தால் ஜாதகருக்கு எடுக்கும் முயற்சிகளில் உறுதியான வெற்றி வாய்ப்புகளை உண்டாக்கும். திடீர் பொருளாதார முன்னேற்றத்தை கொடுக்கும். சுகபோகங்களை அனுபவிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும். வெளியூர் வெளிநாடு போகும் வாய்ப்புகளை.ஜாதகருக்கு உண்டாக்கும்.
ஜெனன ஜாதகத்தில் கேது உபஜெய ஸ்தானத்தில் சாதகமான நிலையில் இருந்தால் ஜாதகருக்கு மெய் ஞானத்தை உண்டாக்கும். ஆன்மிகம் சார்ந்தப்பற்றை அதிகரிக்க செய்யும். தீர்த்த யாத்திரை புனித ஸ்தலகளுக்கு சென்று இறை வழிபாடு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும்.