Explore Our Astrology Insights
Unlock the mysteries of the stars and embrace the cosmic guidance
Unlock the mysteries of the stars and embrace the cosmic guidance
மனித பிறவி என்பது அவரவர் கர்ம வினையின் அடிப்படியில் தான் அமைகின்றது. கர்ம வினைப்படி வாழ்வில் நடக்கும் சுப அசுப பலாபலன்கள் பன்னிரு கட்டங்கள் மற்றும் அவற்றில் நிற்க்கும் கிரகங்களின் அடிப்படையில் நிகழ்கின்றது. ஜோதிடத்தின் மிக அடிப்படையாக பார்க்கப்படுவது பன்னிரு (jathagam-kattam) ராசி கட்டங்கள், இருபத்தேழு நட்சத்திரங்கள். இவற்றை ஆளுவது ஒன்பது நவகிரங்கள். இவற்றின் அடிப்படையிலே ஜாதக கட்டம் உருவாங்கப்படுகிறது.
ஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த நேரத்தில் கிரகங்கள் அமர்ந்திருக்கும் ராசியின் அமைப்பைப் பொருத்தே ஜென்ம ஜாதகம் எழுதப்படுகிறது. சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரமே ஜென்ம நட்சத்திரம் ஆகும். ஜாதகரின் வாழ்வில் நாடாகும் எந்த ஒரு நிகழ்வையும் இந்த பன்னிரு ராசிகளில் அமைய பெற்ற கிரங்களே தீர்மானிக்கின்றன. ஜாதகரின் இயல்பு, கல்வி, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேறு, ஆரோக்கியம், தொழில், மகிழ்ச்சி, பொருளாதார நிலை, குடும்ப நிலை, துக்கம், மரணம் என வாழ்வில் நடக்கும் அனைத்து அம்சங்களையும் ஜாதக கட்டம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
ஜாதக கட்டத்தில் முக்கியமான விஷயங்களில் முதலில் கவனிக்கபட வேண்டியவை லக்கினமும், லக்கினாதிபதியின் நிலையும் ஆகும். லக்கினம் என்பது ஜாதகரின் ஆன்ம பலத்தை குறிக்கும். மேலும் ஜாதகரின் தேக ஆரோக்கியம், நினைவாற்றல், ஆயுள், வாழ்வில் நாடாகும் மகிழிச்சியான நிகழ்வுகள், சுக துக்கங்கள், தலை, அழகு, அறிவு, புகழ், செல்வாக்கு போன்ற விஷயங்களையும் குறிக்கும். ஜாதகத்தில் லக்கினமும், லக்கினாதிபதியும் நல்ல நிலையில் அமையப்பெற்றால் ஜாதகருக்கு ஜாதகத்தில் உள்ள அனைத்து யோகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் ஏற்படும். நீண்ட ஆயுளும் உண்டாகும்.
லக்கினத்தில் பாவ கிரகங்ளோ, அல்லது 6,8,12 ஆம் அதிபதிகளோ இல்லாமல் இருப்பதும், லக்கினத்தின் தன்மையை பாதிக்காது. அதே போல் லக்கினாதிபதியும் சமம், பகை நிச்சம், கிரஹணம், அஸ்தமனம், பாவர்களின் இணைவு, பார்வை பெறாமல் இருப்பதும் லக்கினாதிபதியின் வலுவை அதிகரிக்கும். மேலும் லக்கினத்தில் சுபர்கள் இருப்பதும், லக்கினாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றோ, சுபர்களின் இணைவு, பார்வை பெற்றிருந்தாலோ ஜாதகருக்கு மிகுந்த சுப பலன்களும், ஜாதகத்தில் உள்ள அனைத்து யோகங்களும் அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டும்.
ஜாதகத்தில் திருகோணம் என்பது 1,5,9 பாவங்கள் ஆகும். இவை லட்சுமி ஸ்தனங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஜாதகத்தில் 1,5,9 ஆம் பாவம் ஜாதகரின் பூர்விகம், கல்வி, உயர்கல்வி, அறிவி, புத்தி, சிந்தனை, காதல், மனமகிழ்ச்சி, புத்திர பாக்கியம், குலா தெய்வ அனுகிரஹம், முன்னோர்கள் ஆசீர்வாதம், தெய்வ நம்பிக்கை, புகழ், செல்வாக்கு, குருமார்களின் ஆசீர்வாதம், தகப்பனாரின் வழிகாட்டுதல், அதிர்ஷ்ட மேன்மைகளை அனுபவித்தால் போன்ற அனைத்து சுப பலன்களை தரும் ஸ்தானம் ஆகும்
எனவே 1,5,9ஆம் பாவத்தில் சுபர்கள் இருப்பதும், 1,5,9ஆம் அதிபதிகள் ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தாலும் ஜாதகருக்கு இந்த பாவங்களின் அனைத்து சுப பலன்களையும் அனுபவித்து வாழ்வில் முன்னேற்றம் கண்ணும் யோகம் ஏற்படும். அதுவே 1,5,9 ஆம் பாவத்தில் பாவர்கள் இருந்தாலோ 1,5,9 ஆம் பாவாதிபதி பகை, நிச்சம், கிரஹணம், அஸ்தமனம், பாவர்களின் இணைவு, பார்வை பெற்றாலோ ஜாதகருக்கு இந்த பாவங்களின் சுப பலன்களை அனுபவிப்பதில் தடைகள், துன்பங்களும் ஏற்படும்
ஜாதகத்தில் 1,4,7,10 ஆம் பாவங்கள் கேந்திர ஸ்தானம் ஆகும். இந்த பாவங்கள் ஜாதகரின் சுகம், கல்வி, ஒழுக்கம், சொத்துகள், வண்டி வாகனகளின் நிலை, தாயாரின் நிலை, வாழ்க்கைத்துணை, கூட்டாளி, சமுயத்துடன் ஜாதகருக்கு இருக்கும் தொடர்ப்பு, தொழில், கடமை, கர்மா போன்ற வாழ்க்கைக்கு தேவையான அணைத்து விஷயங்களும் தரும் ஸ்தானம் ஆகும். எனவே கேந்திர ஸ்தனங்கலான 1,4,7,10 ஆம் பாவதிபதிகள் நல்ல நிலையில் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருப்பது ஜாதகருக்கு வாழ்வில் பொருளாதார நிலையிலும், திருமண வாழ்வில் வெற்றியை உண்டாக்கும்.
ஜாதகத்தில் சந்திரன் அமைய பெற்ற ராசியே ஜாதகரின் ஜென்ம ராசி ஆகும். சந்திரன் ஜாதகரின் மனநிலையையும் உடல் வலிமையையும் குறிக்கும் கிரகம். எனவே ஒருவர் ஜென்ம ஜாதகத்தில் சந்திரன் நிச்சமாகவோ, கிரஹனமாகவோ, அல்லது தேய்பிறை நிலையிலோ இருந்தால் ஜாதகருக்கு மனக்குழம்பம், மனதைரியம் குறைவாக இருப்பது, உடல் வலிமை இல்லாமல் போவது போன்ற அசுப பலன்களை உண்டாக்கும். அதுவே சந்திரன் ஆட்சி, உச்சம், வளர்பிறை நிலையில் இருந்தால் ஜாதகர் மனதைரியம் பெற்றவராக, வாழ்வில் முக்கிய காலகட்டங்களில் தெளிவான முடிவு எடுப்பது போன்ற சுப பலன்களை உண்டாக்கும். ஜாதகர் திடமான உடல் வாகு பெற்றிருப்பர்.
ஜாதகத்தில் பலன்கள் கணிக்கும் முறையில் ஆயுளை ஆராய்வதும் அவசியமான ஒன்றாகும். ஆயுளை கணிக்க எட்டாம் அதிபதியின் நிலையை கணிப்பது அவசியம் ஆகும். எட்டாம் அதிபதி ஆட்சி, உச்சம், நட்பு எனும் நிலையில் இருக்க வேண்டும். ஆயுளுக்கு கரக கிரகமான சனியின் நிலையையும் ஆராய்வது முகியமாகும். மேலும் துணை ஆயுள் ஸ்தானம் எனும் மூன்றாம் பாவமும் அதன் பாவத்தின் அதிபதியின் நிலையையும் கணிப்பது அவசியம் அதேபோல் லக்கினாதிபதியின் நிலையையும் பார்க்க வேண்டும். இந்த அனைத்து விதிகளும் பொருந்தி வரும் பட்சத்தில் ஜாதகருக்கு பூர்ண ஆயுள் உண்டாகும்.
ஜாதகர் பிறந்த ஜென்ம நட்சத்திர அதிபதியின் திசா தான் முதலில் தொடங்கும். தசாநாதன் லகனத்திற்கு சுபராக இருந்தால் ஜாதகருக்கு அந்த காலகட்டத்தில் சுப பலன்கள் ஏற்படும். ஜாதகர் தான் வாழ்நாளில் முன்னேற்றமும் வெற்றியும் அடைய நடக்கும் தசா புத்தி சாதகமாக இருப்பது அவசியம். லக்கின சுபர்களின் தசா அடுத்தடுத்து நடக்கும் அமைப்பு ஏற்பட்டால் அது ஜாதகருக்கு யோக நிலையை அடைய செய்யும். லக்கின பாவர்கள் தசா இளமை காலத்தில் தொடர்ந்து நடந்தால் அது ஜாதகரின் முன்னேற்றத்திற்கு தடையாய் அமையும்.